டிரெண்டிங்

லிங்காயத் சமுதாயத்திற்கு மைனாரிட்டி அந்தஸ்து

லிங்காயத் சமுதாயத்திற்கு மைனாரிட்டி அந்தஸ்து

rajakannan

லிங்காயத் சமுதாயத்திற்கு கர்நாடக அரசு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் பரவலாக வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர், தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக நாகமோகன் தாஸ் தலைமையில் அம்மாநில அரசு தனி கமிட்டி அமைத்திருந்தது. நாகமோகன் தாஸ் கமிட்டி பரிந்துரையின் பெயரில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அம்மாநில அமைச்சரவை நேற்று அங்கீகரித்தது. மேலும், மத்திய அரசுக்கு மாநில அரசு இதே கோரிக்கையை பரிந்துரை செய்தது.

கர்நாடக அரசின் முடிவை வீர சைவர்கள் பிரிவினர் ஏற்க மறுத்து வரும் நிலையில், லிங்காயத் சமுதாயத்திற்கு கர்நாடக அமைச்சரவை இன்று மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியுள்ளது. மைனாரிட்டி ஆக லிங்காயத் மதம் அங்கீகரிக்கும் பட்சத்தில் அதற்கென சிறப்பு சலுகைகளை அதில் உள்ளவர்கள் பெற முடியும். 

முன்னதாக, லிங்காயத் மதம் பிரிக்கப்படும் பட்சத்தில் அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருக்காது என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் கூறியிருந்தார்.