டிரெண்டிங்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

rajakannan

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ள எடியூரப்பா கர்நாடகா சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

சட்டசபையில் எடியூரப்பா பேசுகையில், “கர்நாடகா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது பாஜகவே. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் என்னை கர்நாடக முதல்வர் வேட்பாளராக அம்பேத்கர் பிறந்தநாளன்று அறிவித்தார்கள். பரப்புரை சமயத்தில் மக்கள் எனக்களித்த ஆதரவை நான் மறக்க மாட்டேன். 

கர்நாடகா முழுக்க சுற்றி மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொண்டுள்ளேன். கர்நாடகா மக்கள் மதிப்பும், மரியாதையுடனும் வாழ நினைக்கின்றனர். கர்நாடகா மாநில விவசாயிகளின் நலனுக்காக இறுதிவரை போராடுவேன்.

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதால் ஆட்சியமைக்க பாஜகவை ஆளுநர் அழைத்தார். மக்களின் தீர்ப்பிற்கு எதிராக காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த 2 கட்சிகளுக்கும் மக்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை, இவர்கள் சுயநலத்திற்காக ஒன்று கூடி ஆட்சியமைக்கின்றனர்.

கர்நாடகாவில் 3,750 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றது எங்கள் ஆட்சி, கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தது” என்றார். மேலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.