டிரெண்டிங்

ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு - 15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு

ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு - 15 நாட்களில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு

rajakannan

ஆட்சி அமைக்க யாரையும் ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைக்காத நிலையில், கர்நாடகாவில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. ஆனால், “ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணியளவில் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்கிறார். தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்” என பாஜக எம்.எல்.ஏ சுரேஷ்குமார் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். எடியூரப்பா பதவியேற்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்ட இந்தத் தகவலை எம்.எல்.ஏ சுரேஷ் உடனடியாக நீக்கிவிட்டார்.

இதனிடையே, பாஜக எம்.எல்.ஏ பதிவிட்ட அதே தகவலை கர்நாடக பாஜகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உடனடியாக டெலீட் செய்த. அந்த ட்விட்டில், “கோடிக்கணக்கான கர்நாடக மக்கள் காத்திருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. எடியூரப்பா கர்நாடகாவின் முதலமைச்சராக நாளை காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  சில நிமிடங்களில் டெலீட் செய்த ட்வீட்டை கர்நாடக பாஜக மீண்டும் பதிவிட்டது. 

மேலும், ஆட்சி அமைக்க ஆளுநர் விடுத்த அழைப்பு கடிதத்தையும் பாஜக வெளியிட்டது. அதில் பெரும்பான்மையை நீருபிக்க 15 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.