குழந்தைத் திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுக எம்.பி கனிமொழி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த நந்தினி என்ற 9ஆம் வகுப்பு மாணவிக்கு உறவினர்கள் திருமணம் செய்ய முயன்றதாக கூறியுள்ளார். அந்தத் திருமணத்தை மாணவியே கலெக்டரிடம் கூறி நிறுத்தியதாகவும், தற்போது அந்த மாணவி விடுதியில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதுபோன்ற வீரப்பெண்கள்தான் சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியும் என்றும், குழந்தைத் திருமணம் முற்றிலுமாக ஒழிக்கப்படாதது வேதனை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு கல்வி அறிவு வேண்டியதில்லை என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும் எனக்கூறியுள்ள கனிமொழி, அந்த மாணவிக்கு வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.