பாஸ்போர்ட்டில் இந்திக்கு மாற்றாக மாநில மொழி இடம்பெறுமா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையின் இன்றையக் கூட்டத்தின் போது பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கிடையே பேசிய கனிமொழி, இந்திக்கு பதிலாக பாஸ்போர்ட்டில் மாநில மொழி இடம்பெறுமா என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், இந்திப் பேசாத மாநில மக்களுக்கு வசதியாக பாஸ்போர்ட்டில் ஆங்கிலம் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.
பாஸ்போர்ட்டில் இந்தி இடம்பெறக் காரணம், அது தேசியமொழி என்பதுதான் என்று கூறிய அமைச்சர், பாஸ்போர்ட் உரிமையாளர் குறித்த தனிநபர் விவரங்கள் இப்போது ஆங்கிலத்தில் அச்சிடப்படுவதாகவும் விளக்கமளித்தார்.