டிரெண்டிங்

கனிமொழி கேள்வி: மத்திய அமைச்சர் விளக்கம்!

கனிமொழி கேள்வி: மத்திய அமைச்சர் விளக்கம்!

webteam

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, மக்கள் கடும் அச்சமடைந்தது குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

அதில், 'மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சேர்ந்து, எண்ணெய்க் குழாயில் ஏற்பட்ட கசிவுகள் குறித்து 30, ஜூன் 2017-ம் தேதி அன்று ஆய்வுசெய்தார்கள். அந்த ஆய்வின்போது, 1,000 சதுர அடி பரப்பளவில், ஒரு அடி ஆழத்துக்கு எண்ணெய்க் கசிவினால் மண் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பாதிப்புக்குள்ளான மண் முழுமையாக அகற்றப்பட்டு, அருகில் உள்ள ஓ.என்.ஜி.சி குத்தாலம் எரிவாயு மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பாதிப்புக்குள்ளான நிலத்திலிருந்து மண் முழுமையாக அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மண்ணை விவசாயத்துக்கு ஏற்ற வகையில் நிரப்பவும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்று தெரிவித்திருக்கிறார்.