டிரெண்டிங்

பாடத்திட்டத்தில் காமராஜர் வாழ்க்கை வரலாறு: செங்கோட்டையன்

பாடத்திட்டத்தில் காமராஜர் வாழ்க்கை வரலாறு: செங்கோட்டையன்

webteam

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் ‌சே‌ர்க்க‌‌ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ப‌‌ள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ செங்கோட்டையன்‌ தெரிவித்துள்ளார்.‌ சட்டப்பேரவை‌யில் இன்று கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பாக ராதாபுரம் ‌‌எம்.எல்.ஏ. இன்பதுரை கேள்வி எழுப்பினார்.

வரும் 15 ஆ‌ம் ‌தேதி காமராஜரின் பிறந்‌தநா‌ள் வருவதாகவும், அவ‌ரை கவுரவிக்கும் ‌வகையில் பள்ளி பாடத்திட்டத்தில் அவரது வாழ்க்கை வர‌லாற்றை சேர்க்‌‌க வேண்டும் என்றும் இன்பதுரை கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்‌த‌ அமைச்சர் செங்கோட்டையன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தேசியத்‌ தலைவர்களுக்கு நூற்றா‌ண்டு விழா கண்டவர் என்று குறிப்பிட்டார். காமரா‌ஜ‌ரின் வாழ்க்கை‌‌ வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்ப்பது கு‌றித்தும்,‌ அவரது பெய‌ரில் விருது ‌வழங்குவது குறித்தும் முதலமைச்சருடன் ஆலோசித்து வி‌ரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும்‌ செங்கோட்டையன் ‌‌தெரி‌வித்தார்.