தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் லோட்டாஸ் கார்டன் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குறுவை சாகுபடி பாக்கியை மத்திய அரசிடம் கேட்டு பெறுவோம். ரேசனில் கண்ணில் ஒற்றிக் கொள்ளக்கூடிய அரிசி வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
மேலும், “சி.பி.ராதாகிருஷ்ணன் எந்த அடிப்படையில் கருத்து சொன்னார் என தெரியவில்லை. நாங்கள் வேறு கட்சி. அவர்கள் வேறு கட்சி. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக கோவையில் கோயில்கள் சேதப்படுத்தியது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்த விவகாரத்தில் விழித்துக்கொள்ளவில்லை என்றால் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.