சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை கமல்ஹாசன் 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். ஹைதராபாத்திலிருந்து உடல்நிலை சரியில்லாமல் திரும்பிய நடிகர் ரஜினியை தான் சந்திப்பேன் என்று அப்போது பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கமல்ஹாசனுக்கும் கால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் ஓய்வில் இருந்தார். தற்போது நடைபெற்ற இந்த சந்திப்பில் ஒருவரையொருவர் நலம் விசாரித்ததோடு அரசியல் குறித்தும் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற தேர்தலில் நண்பர் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்று கமல் கூறிவந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.