டிரெண்டிங்

கலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து: கமல்ஹாசன்

கலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டம் ரத்து: கமல்ஹாசன்

webteam

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்வதாக இருந்த கமல்ஹாசனின் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ட்விட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வந்த கமல்ஹாசன், இன்று புதிதாக ஒரு அரசியல் கட்சியை தொடங்குகிறார். அதன்படி ராமேஸ்வரத்தில் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். கமலின் இன்றைய திட்டத்தில்  காலை 7.45 மணி அளவில் அப்துல்கலாம் இல்லத்திற்கு செல்வதாகவும் அதன்பின்னர் 8.15 மணிக்கு கலாம் படித்த‌ பள்ளியில் மாணவர்களை சந்தித்து உரையாடுவதாக இருந்தது. இதனிடையே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு நடிகர் கமல்ஹாசன் செல்வதற்கு, மண்டபம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதி மறுத்திருந்தார். ‌இது தொடர்பாக அவர் அவர் கையெழுத்திட்டுள்ள அனுமதி மறுப்பு கடிதத்தில், அரசியல் இயக்கத்தினர் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் கமல் வருகைக்கு அனுமதி தர இயலாது எனத் தெரிவித்துள்ளார்.இதேபோல் கமல்ஹாசன் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு வர தடைவிதிக்கக்கோரி, இந்து முன்னணி கட்சி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அ‌ளித்திருந்தார்


இந்நிலையில் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு செல்வதாக இருந்த கமல்ஹாசன் தனது திட்டத்தை ரத்து செய்துள்ளார்.பள்ளிக்குள் கமல் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திட்டத்தை ரத்து செய்தார்.