பிராமணர் அல்லாதோரை ஆலையங்களில் அர்ச்சகராக்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பான திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் ஆறு தலித்கள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக கேரள அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமலும் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல், “திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரருக்கு வணக்கம். பெரியாரின் கனவு நனவாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.