பிப்ரவரி 21ஆம் தேதி கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.
நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதும் தொடரில், தனது அரசியல் பயணம் குறித்தும் தெரிவித்து வருகிறார். இந்த வார இதழில், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல; நாடு தழுவியது என்று அவர் கூறியுள்ளார். மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக நேற்று அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்கிறார். இதற்கு காரணம், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன, அவரை போல பல கனவுகளை கொண்டவன் தான் என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும் விமர்சிப்பது மட்டுமே என் வேலையன்று, நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என்றும் கூறியுள்ளார்.