டிரெண்டிங்

ரஜினியுடன் சேர்வது தேவையா? கமல்ஹாசன் யோசனை!

ரஜினியுடன் சேர்வது தேவையா? கமல்ஹாசன் யோசனை!

webteam

ரஜினியும் தானும் சேர்வது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

வார இதழ் ஒன்றில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில், தொழிலாளர்கள் அவ்வப்போது அடிக்கும் ஆராய்ச்சி மணிகளுக்கு அரசு செவிசாய்த்திருந்தால், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தமே நடந்திருக்காது என்று தெரிவித்துள்ளார். மாற்றுக்கட்சிகளிலிருந்து தன்னுடைய கட்சியில் சேர நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ள கமல்ஹாசன், அவர்களின் பெயர்களையெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார். நானும், ரஜினியும் கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி, எங்கள் இருவரையும் சேர்த்தே துரத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். 

இதற்கு உண்மையில் காலம் தான் பதில் சொல்லும் என்று குறிப்பிட்டுள்ள கமல், தானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும், ரஜினியும் கட்சியை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இருவரின் கொள்கை விளக்கங்கள் பொருந்துகிறதா என்று பார்த்த பிறகு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், அதனால் இது இப்போது எடுக்கக் கூடிய முடிவே கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். தவிர, இருவரும் இணைந்து செயல்படுவது தேவையா என்பதை இருவருமே யோசிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு எது நல்லது என்பதை கொள்கைதான் முடிவு செய்யும் என்றும், அதைவிடுத்து பெயர்களை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.