டிரெண்டிங்

நாளை மறுநாள் பதிவாகும் கமலின் கட்சி?

நாளை மறுநாள் பதிவாகும் கமலின் கட்சி?

webteam

தனது கட்சியைப் பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் நடிகர் கமல்ஹாசன் நேரம் கேட்டுள்ளார்.

அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன், தனது துபாய் பயணத்தை ரத்து செய்து விட்டு, கட்சியின் பெயர், சின்னம் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளார். அதன்படி, கட்சியின் பதிவுக்கு நேரம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை அவர் அணுகியுள்ள நிலையில், நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் அவருக்கு நேரம் ஒதுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வருகிற 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல், அதேநாளில் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சிப் பெயரையும் கொள்கைகளையும் அறிவிக்கவுள்ளார்.