டிரெண்டிங்

முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன்

முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன்

Rasus

முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசையும், அமைச்சர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதற்கு தமிழக அமைச்சர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே இன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கியதை தடுத்து நிறுத்திய தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் முந்திச் செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என குறிப்பிட்டுள்ளார். பின்பற்றுவோர் தொண்டர் அல்ல. மக்களும், குடியரசும் என அதில் கூறியிருக்கிறார்.