டிரெண்டிங்

அரசியல்வாதியாக கமல்ஹாசன் போட்ட முதல் கையெழுத்து

அரசியல்வாதியாக கமல்ஹாசன் போட்ட முதல் கையெழுத்து

Rasus

அரசியல்வாதியாக கமல்ஹாசன் தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் விழாவில் இன்று கலந்துகொண்டார். அப்போது மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தற்போதைய சூழலில் முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை எடுக்க முடிவதில்லை என தெரிவித்தார். மேலும், தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் மட்டும் இருந்தால் போதாது என்று கூறிய அவர், ஒவ்வொருவரிடம் அந்த எண்ணம் ஏற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் மாணவர் ஒருவருக்கு நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாக தனது முதல் கையெழுத்தை போட்டுள்ளார்.

தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகிற 21ஆம் தேதி முதல்தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்றும் பெயர் வைத்துள்ளார். மேலும் சுற்றுப் பயணத்தை தொடங்கும் 21ம் தேதியே தனது கட்சியின் பெயரையும் கமல்ஹாசன் அறிவிக்க இருக்கிறார்.