கந்துவட்டிக் கொடுமையை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அசோக்குமாரின் அகால மரணம்போல் இனி நிகழவிடக்கூடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
அசோக்குமாரின் குடும்பத்ததனருக்கும், நண்பர்களுக்கும் தனது இரங்கலையும் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார். கந்துவட்டி தொடர்பாக கமல்ஹாசன் ஏன் ட்விட்டர் செய்தி எதுவும் வெளியிடவில்லை என தமிழிசை சவுந்திரராஜன் நேற்று மறைமுகமாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று இந்த செய்தியை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.