எண்ணூர் பகுதியில் இன்று ஆய்வை மேற்கொண்ட கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று விரைவில் மீன மக்களின் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ஆட்சியருக்கு கமல் ட்விட்டரில் நன்றி.
மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சென்னை அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசு எந்தவித நடவடிகைகளையின் எடுக்கவே இல்லை.மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் முனையங்களை நடு ஆற்றில் கட்டியுள்ளன. நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையை ஏழை மக்களுக்கு கொடுக்காத அரசு நல் ஆற்றைப் புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்தது. இதன்
தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன், முதல்முறையாக எண்ணூர் துறைமுக கழிமுகம்,சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். கமல்ஹாசனின் இந்த முயற்சிக்கு திருமாவளவன், பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
“இந்நிலையில் கமல் தனது ட்விட்டரில் இந்தப் பிரச்னை குறித்து “தானே முன்வந்து விரைவில் ஆவனம் செய்ய வாக்குறுதி அளித்த ஆட்சியருக்கு சுந்தரவல்லியாருக்கு எண்ணூர் பகுதி குப்பத்து குடும்பங்களோடு என் நன்றியும் சேரும்” என்று குறிப்பிடுள்ளார். விரைவில் அரசு சார்பில் அப்பகுதி மக்களின் குறைகள் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.