டிரெண்டிங்

கட்சிக் கொடி லோகோவை காப்பி அடித்தாரா கமல்..?

கட்சிக் கொடி லோகோவை காப்பி அடித்தாரா கமல்..?

rajakannan

கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அவர் அறிமுகம் செய்த லோகோ பற்றி சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரையில் நேற்று நடைபெற்ற முதல் அரசியல் மாநாட்டில் கமல்ஹாசன் அவரது கட்சிக் கொடியை ஏற்றினார். அத்துடன் “மக்கள் நீதி மய்யம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். கமலின் கட்சிக் கொடியில் வெள்ளை நிறத்தில், 6 இணைந்த கைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளது. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கறுப்பு நிற வளையம் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அத்துடன் கமல்ஹாசன் கட்சியையும், கொடியையும் மீம்ஸ்கள் மூலம் நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர்.

அதில், தேசிய தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் லோகோவை போல், கமல் கட்சியில் உள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். இரண்டு லோகோவை ஒன்றாக வைத்து பலர் மீம்ஸ்கள் பதிவிட்டுள்ளனர். இரண்டு லோகோவிலும் 6 கைகள் அடுத்தடுத்து பிணைந்தது போல் இருக்கிறது. இதில் என்ன வேற்றுமை என்றால், 6 கைகளும் சிவப்பு அல்லது வெள்ளை நிறங்களில் ஒரே மாதிரியாக இருக்கும்.

அதேபோல், மும்பை செம்பூரில் உள்ள தமிழர் பாசறை அமைப்பின் லோகோ அச்சு அசல் கமல் கட்சி கொடியின் லோகோவை போல் உள்ளதாக பலர் கூறுகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை திருப்பிப் போட்டால் மநீம(மக்கள் நீதி மய்யம்) என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.