மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இன்று நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.
கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஷாருக்கான், அமிதாபச்சான்,கஜோல் என ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். கஜோல் தன் ட்விட்டர் பக்கத்தில் விழாவில் கலந்து கொண்டதற்கான புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சர்வதேச திரைப்படதொடக்க விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் பின்னர் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
இச்சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால் கமல் இது அரசியல் சம்பந்தமான சந்திப்பு இல்லை என்று மறுத்துள்ளார்.
இதற்கு முன்பு ஒருமுறை மம்தாவை கமல் சந்தித்துப் பேசினார். அப்போது மம்தா, தமிழக அரசியல்வாதிகளை விமர்சிக்கும் வகையில் தன் கார் வரை வந்து தன்னை வழி அனுப்பி வைத்தார் என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.