நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இருவரும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று சமீபத்தில் நடிகை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீபிரியா. தற்போது இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பிஸியாக தன்னுடைய வேலையை செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கருத்துக்களையும் மறவாமல் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், “அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் ரஜினி - கமல் அரசியல் பிரவேசம் குறித்து பரப்பரப்பாக விவாதித்து வருகின்றனர். அவர்களால் ஏன் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர முடியாது? கண்டிப்பாக ரஜினியும் கமலும் அரசியலுக்கு வர வேண்டும். நல்ல மாற்றங்களை தர வேண்டும்” என்று ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.