டிரெண்டிங்

மோடி ஒரு சமூக விஞ்ஞானி: ராம்நாத் கோவிந்த் புகழாரம்

rajakannan

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சமூக விஞ்ஞானி என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழ்ந்துள்ளார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சி ஒன்றில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அப்துல் கலாம் ஒரு விண்வெளி விஞ்ஞானி, அதேபோல் மோடி ஒரு சமூக விஞ்ஞானி என்று கூறினார். 

ராம்நாத் பேசுகையில், “மோடி குஜராத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர். அப்துல் கலாமும் இங்கு சில நாட்கள் இருந்துள்ளார். மோடி குஜராத்தில் தான் பிறந்து வளர்ந்து, படித்து பின்னர் நாட்டின் பிரதமர் ஆகியுள்ளார். இது உங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமூட்டும் விஷயம்.  

அப்துல் கலாம் மிகவும் அற்புதமான மனிதர். எனக்கு முன்பு குடியரசு தலைவராக இருந்தார். கலாம் குடியரசு தலைவராக இருந்த போதும், அவர் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. அதனால் அவரை நான் விண்வெளி விஞ்ஞானி என்று கூறுவது வழக்கம். அதேபோல், மோடி ஒரு சமூக விஞ்ஞானி” என்றார்.