டிரெண்டிங்

ஸ்டாலின் எதையும் தெரிந்து கொண்டு பேசுவதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

ஸ்டாலின் எதையும் தெரிந்து கொண்டு பேசுவதில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

rajakannan

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதையுமே தெரிந்துகொண்டு பேசுவதில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் கூறியதால் அங்கு பரபரபப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, இனி முறைப்படி அழைப்பு விடுக்கப்படும் என்று கூறியதையடுத்து, அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

பின்னர் தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதையும் புரிந்துகொள்ளாமல் பேசுவார் என்று விமர்சித்தார். தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும், கூடுதலாக வைகை மற்றும் பொதிகை பெயர்கள் இணைக்கப்பட்டுள்‌ளதாகவும் அவர் கூறினார்.