சென்னை பெரியார் திடலில் இன்று ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்!’ புத்தகத்தின் அட்டையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ளார். அதற்கான புகைப்படங்களை திமுகவை சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு கால ஆட்சி, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அறுபதாண்டு சட்டமன்றப் பணி நிறைவு ஆகிய மூன்று முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டாடும் வகையில் வெளிவரவுள்ள நூல் இது. திராவிட இயக்கம் கடந்த நூறாண்டுகளில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளை மதிப்பிட்டு இது எழுதப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் உள்ள புத்தகக் கடைகளில் இந்தப் புத்தகம் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.