டிரெண்டிங்

இரட்டை இலை விவகாரம் நாளையுடன் முடியும்: கே.பி.முனுசாமி நம்பிக்கை

இரட்டை இலை விவகாரம் நாளையுடன் முடியும்: கே.பி.முனுசாமி நம்பிக்கை

webteam

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள விசாரணை நாளையுடன் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் ஆணையம் முழுமையாக முடிவெடுக்கும். தினகரன் தரப்பினரிடம் எந்தவித ஆதாரமும் இல்லாததால் தான் நாங்கள் இரட்டை இலை விவகாரத்தை உடனே முடிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் தினகரன் தரப்பினர் முடிக்கவிடாமல் விசாரணை முடியும் நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தை கூறியும், ஏதாவது ஒரு மனுவை தாக்கல் செய்தும் தேர்தல் ஆணையத்திடம் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே டிடிவி தரப்புக்கு எந்தவிதமான வெற்றி வாய்ப்பும் இல்லை. அவர்கள் அளித்த ஆவணங்களும் போலியானவை” என்று கூறினார்.