டிரெண்டிங்

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கே.சி.பழனிசாமி

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் கே.சி.பழனிசாமி

webteam

பாஜகவை விமர்சித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த கே.சி.பழனிசாமி கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவிப்பு வெளியிட்டது. 

அதில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருப்பூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி, கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அதிமுக பதவி விவகாரங்களில் கட்சிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.