டிரெண்டிங்

 “மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்

 “மோடி சாதனை செய்துவிட்டது போல் ரஜினி பேசுகிறார்” - கே.பாலகிருஷ்ணன்

webteam

ரஜினிகாந்த் பேசுவது உண்மைக்கு புறம்பானது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது, ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மோடி மற்றும் அமித்ஷா அதை மாற்றி இருக்கிறார்கள். ஆதரவு குறைவாக இருக்கும் மாநிலங்களவையில் முதலில் மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர். 

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. எதை அரசியல் ஆக்க வேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மோடி ஏதோ சாதனை செய்துவிட்டதுபோல் ரஜினிகாந்த் பேசிவருகிறார். இது உண்மைக்கு புறம்பானது. ரஜினிகாந்த் எந்த நோக்கத்திற்காக இது போன்று பேசி வருகிறார் என தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னை அரசியலாகிவிட்ட நிலையில் அதைப்பற்றி பேசுவதே அரசியல்தான். இதேநிலை நீடித்தால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே முதல்வர் என அறிவித்தாலும் அறிவிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.