தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்தது தமிழக அரசு.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்தோர் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி டிஜிபி ராஜேந்திரன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் தமைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.