டிரெண்டிங்

போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்கள் தர்ணா

போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்கள் தர்ணா

Rasus

போயஸ் கார்டனனில் செய்தி சேகரிக்க அனுமதிக்கக் கோரி பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்குள் அவரது அண்ணன் மகள் தீபா இன்று காலை செல்ல முயன்றுள்ளார். ஆனால் டிடிவி தினகரன் தரப்பினர் அவர்களை உள்ளே விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்குள்ள போலீசாருடன் தீபா ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் உள்ளே விடாமல் போலீசார் தடுத்தனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் செய்தியாளர்களை தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, போயஸ் கார்டனில் செய்தி சேகரிக்க அனுமதி கோரி பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.