டிரெண்டிங்

“காங்கிரஸ்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்” - கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு

rajakannan

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களின் வெற்றிக்கு காங்கிரஸ்காரர்கள் சிலர் தடையாக இருந்து வருவதாக முதலமைச்சர் குமாரசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பெங்களூருவில் பே‌சிய அவர் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் முதுகில் குத்தினாலும் அதற்கு பதில் தரும் வகையில் தாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்தார். நாட்டின் நலனே தங்களுக்கு முக்கியம் என்றும், எனவே காங்கிரஸில் சிலர் முதுகில் குத்தினாலும் அதை பொறுத்து கொள்ளப் போவதாகவும் குமாரசாமி தெரிவித்தார். 

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. மக்களவை தேர்தலிலும் அக்கட்சிகள் கூட்டு சேர்ந்து போட்டியிடுகின்றன. கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பார‌திய ஜனதா தனித்து போட்டியிட உள்ளது. எதிர்த்தரப்பில் காங்‌கிரஸ் கட்சி தன் வசம் 20 இடங்களை வைத்துக் கொண்டு மீதமு‌ள்ள 8 தொகுதிகளை கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஒதுக்கியுள்ளது.