டிரெண்டிங்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

Rasus

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார். ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன் உள்பட பலரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 10-ம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.