டிரெண்டிங்

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கால அவகாசம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை கால அவகாசம் நீட்டிப்பு

Rasus

முன்னா‌ள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ‌விசாரணைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். செப்டம்பர் 25-ஆம் தேதி ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். 3 மாதங்கள் ஆணையத்துக்கான கால அவகாசமாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அந்த அவகாசம் வருகிற 25-ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில், ஆணையத்தின் காலக்கெடுவை 6 மாதங்கள் நீட்டிக்குமாறு தமிழக அரசிடம் விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி கேட்டிருந்தார். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு சசிகலாவுக்கும், 10 நாட்களுக்குள் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்ப நேற்று உத்தரவிட்டது. இவர்கள் பதில் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் இவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஆணையத்தின் விசாரணைக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.