டிரெண்டிங்

ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை இன்று திறப்பு

ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை இன்று திறப்பு

Rasus

ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலை இன்று திறக்கப்படுகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலை திறக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர்.

ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக 'நமது அம்மா' நாளிதழும் தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அதிமுக அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.