டிரெண்டிங்

ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது: எடப்பாடி பழனிசாமி

ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பவர்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது: எடப்பாடி பழனிசாமி

webteam

ஆட்சிக்கு குறுக்கு வழியில் நெருக்கடி ஏற்படுத்த முயல்பவர்களை மறைந்த ஜெயலலிதாவின் ஆன்மா ‌ஒரு போதும் மன்னிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த காலங்களில் திமுக குடும்ப ஆட்சி நடத்தியதாகவும், மக்களுக்கு எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் கொண்டுவரவில்லை எனவும் விமர்சித்தார்.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சி தற்போது நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். அவருக்கு முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசுக்கு எதிராக பிரச்னைகளை உருவாக்க சிலர் திட்டமிடுவதாகவும், அவர்கள் கனவு பகல் கனவாகவே முடியும் எனவும் சாடினார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.