டிரெண்டிங்

ஜெ. மரணம்: சந்தேகம் தீரும் வகையில் விரைந்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை

ஜெ. மரணம்: சந்தேகம் தீரும் வகையில் விரைந்து விசாரிக்க வேண்டும் - தமிழிசை

webteam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மக்களின் சந்தேகம் தீரும் வகையில் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜ‌ன் கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் மாநில காவல் துறையினர் விசாரிக்கட்டும் என்றும், சிபிஐ விசாரணை தற்போது தேவையில்லை எனவும் கூறினார்.

முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த, ஜெயலலிதாவின் இறப்புக்கான காரணங்களை முற்றிலுமாக தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிலையில் அரசாங்கமே இருப்பதாகவும், மாநில அரசாங்கம் உடனே அதற்கான விசாரணையை அமைத்து, அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தலாம் என்றும் கூறியிருந்தார். தமிழக அமைச்சர்களுக்கே இப்படிப்பட்ட சந்தேகங்கள் வரும் பட்சத்தில், மாநில அரசே விசாரணைக்கு உத்தரவிடலாம் என்பதே தனது கருத்து என்று கூறியிருந்தார்.

தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளதைத் தொடர்ந்து, அனைவரின் சந்தேகமும் தீரும் வகையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்.