சமூகவலைதளங்களில் தரக்குறைவாக மீம்ஸ் போடுவது தவறான செயல் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தின் வெளியே ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அரசியல் கட்சியனர் யாரையும் தான் இழிவுபடுத்தி பேசியது இல்லை என்றும், சமூகவலைதளங்களில் தரக்குறைவாக மீம்ஸ் போடுவது என்பது தவறான செயல் எனவும் அவர் கூறினார். தன் மீது நடவடிக்கை கோரி மதுசூதனன் அளித்துள்ள கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறார் என யாருக்கும் தெரியாது என்றும், அதுகுறித்து எதுவும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் மதுசூதனனுடன் எப்போதும் போல சுமூகமான உறவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.