டிரெண்டிங்

குருமூர்த்தி என்ன தேவதூதரா? ஜெயக்குமார் கேள்வி

குருமூர்த்தி என்ன தேவதூதரா? ஜெயக்குமார் கேள்வி

webteam

குருமூர்த்தி, சாதாரண மனிதர் தான், அவர் என்ன தேவதூதரா? என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

திருவள்ளுவர் தினத்தையொட்டிசென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திருக்குறளில் சொல்லாதது ஒன்றும் இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே, வாழும் நெறிகளை திருவள்ளுவர் அழகாக கூறியுள்ளார். திருக்குறளை உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன்களும் படித்து அதன்படி நடந்தாலே உலகம்  அமையாக வாழக்கூடிய நிலைமை உண்டாகும். அவர் தமிழர் என்பதில் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். அரசியல் வாதிகள் நாவை அடிக்கி வைப்பது என்பது, அவர் கூறியதில் முக்கியமானது. குருமூர்த்தி என்ன தேவதூதரா? அவர் கூறியது போல ஆட்சி மாற்றம் வராது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கருத்து தற்போதைய ஆட்சி தொடர வேண்டும் என்பது தான்” எனக்கூறினார்.
 
சென்னை நடைபெற்றிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பாஜகவும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.