மீனவர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சீன எஞ்சின்களை பொருத்தக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய மீனவர்களை, பணம் வாங்கிக்கொண்டு போராடியவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் வீண்பழி சுமத்தி அவர்களை அவமானப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார். மீனவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிப்பதாகவும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சீண்டிப்பார்ப்பதை கைவிட வேண்டும் என்றும் கே.பி.பி.சாமி தெரிவித்துள்ளார்.