டிரெண்டிங்

வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஆந்திர வேட்பாளர் கைது!

வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஆந்திர வேட்பாளர் கைது!

webteam

ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த ஜனசேனா வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக் குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்தி ரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

ஆந்திராவில் நடைபெறும் தேர்தலில் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதே போல மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதியில் 2,118 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் , ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அங்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 

இங்கு ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குண்டக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனசேனா கட்சி சார்பில் மதுசூதன் குப்தா என்பவர் போட்டி யிடுகிறார். இவர் கூட்டி (Gooty) என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில், சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் சரியான முறையில் இடம்பெறவில்லை என்று கூறி, தேர்தல் அதிகாரி களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை தரையில் தூக்கி எறிந்து உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.