டிரெண்டிங்

சமூகநீதிக்கு பெரியார் மிகப்பெரிய அடையாளம் - பஞ்சாப் பாஜக வேட்பாளர் ஜக்மோகன் சிங் ராஜூ

சமூகநீதிக்கு பெரியார் மிகப்பெரிய அடையாளம் - பஞ்சாப் பாஜக வேட்பாளர் ஜக்மோகன் சிங் ராஜூ

Sinekadhara

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற ஜக்மோகன் சிங் ராஜூ, தமது சொந்த மாநிலமான பஞ்சாபில் காங்கிரஸ் மாநில தலைவர் சித்துவை எதிர்த்து போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் பணிபுரிந்ததன் அனுபவம், பஞ்சாபில் கொண்டுவரும் திட்டங்கள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் 37 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்துள்ளேன். தமிழ்நாட்டில் பணிபுரிந்த காலங்களில் அதிகம் கற்றுள்ளேன். சமூக நீதிக்கான அடையாளமாக பெரியார் உள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களிடம் பணிபுரிந்துள்ளேன்.

பணியின்போது கற்ற அனுபவம், சமூகநீதி, சமத்துவம் அனைத்தையும் பஞ்சாபில் பயன்படுத்துவேன். சக்திவாய்ந்த வேட்பாளரான சித்துவை எதிர்த்து போட்டியிடுகிறேன். தமிழ்நாட்டில் பணிபுரிந்து நல்ல பெயருடன் பஞ்சாப் தேர்தலுக்கு வந்துள்ளேன் என்று ஜக்மோகன் சிங் ராஜூ கூறினார்.