டிரெண்டிங்

ஜடேஜாவின் பதற்றம்! உமேஷை கொண்டுவந்த ஸ்ரேயாஸின் புத்திசாலித்தனம்! - கைஃப் கருத்து

ஜடேஜாவின் பதற்றம்! உமேஷை கொண்டுவந்த ஸ்ரேயாஸின் புத்திசாலித்தனம்! - கைஃப் கருத்து

webteam

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 முதல் போட்டியில் “ரவீந்திர ஜடேஜா சற்று பதற்றமாக காணப்பட்டார்” மற்றும் “பிளேயிங் லெவனில் உமேஷைச் சேர்த்தது ஸ்ரேயாஸின் புத்திசாலித்தனமான முடிவு’ என்று இந்தியாவின் முனாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 131 ரன்களை மட்டுமே குவித்தது. அடுத்து விளையாடிய கொல்க்லத்தா கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றியை ருசித்தது. இந்த போட்டியில் இரு அணிகளின் கேப்டன்களின் அணுகுமுறை குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

“ஜடேஜா ஒரு சிறந்த ஆல் ரவுண்டர். அவர் இந்தியாவுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, சிஎஸ்கேவின் கேப்டனாக வாய்ப்பு பெற்றார். இந்த போட்டியில் ஜடேஜா சற்று பதட்டமாக காணப்பட்டார். ஒருவேளை முதல்முறையாக கேப்டன் பதவி என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம். அவரால் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தீபக் சாஹரின் இடத்தை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஸ்பாண்டேவுக்கு வழங்கியதில் ஜடேஜா தவறு செய்தார். அது ஒரு தவறு.

மேலும், சென்னையின் முக்கிய வீரர்கள் ரன் எடுக்கவில்லை. உத்தப்பா நன்றாக தோற்றமளித்தார், ஆனால் ஸ்டம்பிங் ஆனார். பலரும் சொதப்ப கேப்டனாக முதல் தோல்வியை சந்தித்து விட்டார். இது அவரது முதல் போட்டி, அவர் கற்றுக் கொள்வார்.” என்று முகமது கைஃப் சென்னையின் புதிய கேப்டன் ஜடேஜா பற்றி கூறினார்

ஸ்ரேயாஸ் அய்யரின் கேப்டன்ஷிப் பற்றியும் கைஃப் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். “ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சி நன்றாக இருந்தது. உமேஷை விளையாடும் லெவன் அணியில் சேர்த்தது புத்திசாலித்தனமான முடிவு. அவர் முன்பு அணியில் இருந்தார் ஆனால் பிளேயிங் லெவனில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் உமேஷை சரியாக பயன்படுத்தினார். ஸ்பின்னர்கள் (வருண் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரைன்) மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோரை திறமையாக பயன்படுத்தினார். அவரது கேப்டன்சி ஆக்ரோஷமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, கேப்டனாக தனது முதல் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார்.” என்று தெரிவித்தார் முகமது கைப்.