ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா போட்டியிடுகிறார்.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா. இவர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சசிகலா மீது வைத்து வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு போயஸ் கார்டன் இல்லம் உட்பட ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் தனக்கும் தனது தம்பிக்கும்தான் சொந்தம் என்றும், கட்சியையும் தானே வழிநடத்த உள்ளதாகவும் தீபா உரிமை கோரி வருகிறார்.
அதிமுக கட்சியும், சின்னமும் தனக்கே ஒதுக்க வேண்டும் என்று தீபாவும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். ஆனால் தீபா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அதனால் அவர் கட்சிக்கு எந்த வகையிலும் உரிமை கோரி முடியாது என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக கூறி தீபாவின் பிரமாணப் பத்திரங்களை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் வரும் டிச.21 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெ.தீபா போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.