டிரெண்டிங்

“அரசியலில் இருந்து விலகுகிறேன்.. மீண்டும் வரமாட்டேன்” - ஜெ.தீபா 

“அரசியலில் இருந்து விலகுகிறேன்.. மீண்டும் வரமாட்டேன்” - ஜெ.தீபா 

rajakannan

உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை உருவாக்கி அரசியலில் ஈடுபட்டார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. தொடக்கத்தில் தீபாவுக்கு பரவலாக ஆதரவு இருந்தது. ஆனால், அமைப்பு தொடங்கிய சில நாட்களிலேயே அவர் பின்னடைவை சந்தித்தார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அவரது வேட்புமனு நிகாரிக்கப்பட்டது. பின்னர் முற்றிலும் அரசியல் செயல்பாட்டில் இல்லை. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து அவர் ஒதுங்கிக் கொண்டார்.

இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக தீபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “என்னுடைய உடல்நிலையே அரசியலில் இருந்து விலக முக்கிய காரணம். நான் நினைத்த சூழல் இப்போது இல்லை. எப்போதும் மீண்டும் அரசியலுக்கும் வர வாய்ப்பு இல்லை. நான் கட்டாயபடித்தி அரசியலுக்கு வரவழைக்கப்பட்டேன். என் வீட்டு முன் வந்த மக்கள் கூட்டம் தான் நான் அரசியலுக்கு வர காரணம். ஜெயலலிதா சொத்துக்கு ஆசைப்படவில்லை: சொத்து வேண்டும் என்றால் அப்போதே அவரிடம் கேட்டிருப்பேன். அரசியலுக்கு வந்ததே தவறு என பலமுறை யோசித்திருக்கிறேன். ” என்றார்.