டிரெண்டிங்

நடந்தது பொதுக்குழு அல்ல; பொதுக்கூட்டம்: டிடிவி தினகரன்

நடந்தது பொதுக்குழு அல்ல; பொதுக்கூட்டம்: டிடிவி தினகரன்

webteam

பொதுச்செயலாளர் சசிகலாவால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இன்று நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று டிடிவி தினகரன் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, ‘ பொதுச்செயலாளர் சசிகலாவால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இன்று நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சியை தொண்டர்களும் மக்களும் விரும்பவில்லை. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புமாறு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல; தேர்தல் வந்தால் அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது.

என்னால் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 அமைச்சர்கள், எம்எல்ஏக்களை நான் தடுத்து நிறுத்தினேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிவர்தான் செம்மலை. ஆளுநர் 2 நாட்களில் முடிவெடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சி தொடர்ந்தால் அதிமுகவுக்கு அவமானம் என்பதால்தான் ஆட்சியை அகற்ற உள்ளேன். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.