டிரெண்டிங்

எல்.முருகன் போட்டியிடும் தொகுதியில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு

எல்.முருகன் போட்டியிடும் தொகுதியில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் ஐடி ரெய்டு

webteam

தாராபுரம் தொகுதியில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல், தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடும் நிலையில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தாராபுரம் தொடுதியில் எல்.முருகனை எதிர்த்து திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார்.