டிரெண்டிங்

அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரருக்கு தொடர்புடையவர் வீட்டில் வீட்டி திடீர் ஐ.டி ரெய்டு

Sinekadhara

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் கல்லூரியில் பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த வீரபாண்டி என்பவர் வீட்டில் வருமான வரித் துறையினர் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான மதர் தெரசா கல்லூரி இலுப்பூர் அருகே மேட்டு சாலை என்னுமிடத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் விராலிமலை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் கொண்ட குழுவினர் விராலிமலையில் உள்ள வீரபாண்டி வீட்டில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தற்போது விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூன்றாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் நிலையில் அவர் வாக்காளர்களுக்கு ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க திட்டமிட்டு உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் அவரது அண்ணன் உதயகுமார் கல்லூரியில் உதவியாளராக பணியாற்றும் விராலிமலை சேர்ந்த வீரபாண்டி என்பவரது வீட்டில் திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறார்கள் என்பது குறித்தும் வீரபாண்டி வீட்டில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பரிசுப் பொருட்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகளின் முழுமையான சோதனைக்கு பின்பே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.