டிரெண்டிங்

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்: கட்சிகள் வாரியாக குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் விவரம்

JustinDurai

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 3-ஆம் கட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் 103 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 3-ஆம் கட்டத் தேர்தல் வரும் 20-ஆம்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 103 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்று தேர்தல் ஆய்வுக்குழு ஒன்று கூறியுள்ளது. அதன்படி, சமாஜ்வாதி கட்சியில் போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 21 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும், பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 55 பேரில் 20 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பகுஜன் சமாஜின் 59 பேரில் 18 பேரும், 56 காங்கிரஸ் வேட்பாளர்களில் 10 பேரும், 49 ஆம்ஆத்மி வேட்பாளர்களில் 11 பேரும் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ், கன்னோஜ், ஜான்சி, மெயின்புரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் 3ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் படிக்க: ”எல்லாத்துக்கும் ’நேரு’தான் காரணமா?; இன்னுமா அவர சொல்லிட்டு இருக்கீங்க?” - மன்மோகன்சிங்