தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இது இந்திய இலங்கைக் கடற்படைகளின் கூட்டுச் சதியோ என்ற பயத்தை நமக்கு எழுப்புகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியக் கடலோர கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக மீனவர்கள் பிரச்னைகளில் போதிய அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீனவர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.