டிரெண்டிங்

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? இன்று மும்பை - டெல்லி மோதல்!

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? இன்று மும்பை - டெல்லி மோதல்!

jagadeesh

நடப்பு ஐபிஎல் தொடரின் பிரமாண்ட இறுதிப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் ‌‌‌‌ மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5 ஆவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 13 ஆண்டுகால கோப்பை தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வேட்கையுடன் களமிறங்குகிறது ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.