டிரெண்டிங்

ஐபிஎல்: கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றி

Veeramani

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 51 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத்- மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா- இஷான் கிஷான் களமிறங்கினார். இருவரும் சிக்சர், பவுண்டரி என அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.



தொடக்க வீரர்களான சுப்மன் கில், விருத்திமான் சஹா சிறப்பாக விளையாடி, மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 11 ஓவர்களில் இருவரும் 100ரன்களை சேர்த்தனர். சஹா 33 பந்துகளிலும், கில் 34 பந்துகளிலும் அரை சதம் அடித்தனர். பின்னர் இருவரும் ஆட்டமிழந்த நிலையில், கடைசி 4 ஓவர்களில் 40ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 2 பந்துகளுக்கு 6ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த 2 பந்தையும் எதிர்கொண்ட மில்லர் ரன் எதுவும் அடிக்கவில்லை. இதனால் மும்பை அணி 5ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் குஜராத் அணி நீடிக்கிறது.